ஆலையடிவேம்பு பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி!

தூய்மையான, பசுமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நாட்டை உருவாக்கும் நோக்கில், ஆலையடிவேம்பு கோளாவில் – 02 பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில், இன்று (28.11.2026) நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியின் பிரதான வடிகான் சுத்தம் செய்யப்பட்டது.

இதன்போது, வடிகானில் தேங்கியிருந்த சேறு, புற்கள், ஆகாயத்தாமரைத் தாவரங்கள் மற்றும் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் அகற்றப்பட்டன.

மேலும், JCB இயந்திரத்தின் உதவியுடனும் சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *