மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இவ்வாறு இ.சாணக்கியன் தெரிவிக்கையில்,
இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக அதிகமான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இம்முறை மாவட்டத்தில் ஒன்பது சபைகளில் ஆட்சி அமைக்க உள்ளத்துடன் மிகுதி இரு சபைகளுக்கும் நாம் ஆதரிக்கும் தரப்பே ஆட்சி அமைக்கும்
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்காகவே இவ்வாறான முன்னெடுப்புக்களை செய்வதனை நாம் குறைத்து மதிப்பிட வில்லை
அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுவது என்பது ஒரு நகைச்சுவை யான விடயம் அவர்கள் தேர்தலில் வென்ற பின்பு பார்ப்போம் எத்தனை சபைகளை அவர்களால் அமைக்க முடியும் என்பதைஎமது கட்சியின் மத்திய குழு தீர்மானத்துக்கு அமைவாக எந்த சபைக்கும் தேர்தல் முடிவுகளின் பின்பு நாம் முதல்வர் வேட்பாளர் என்பதனை தீர்மானிப்போம் என தெரிவித்தார்

