வீதி விபத்தில் பெண் பலி – சம்பவம் தொடர்பில் விசாரணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பின்னதூவ அருகே நடந்த வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு வேனின் ஓட்டுநர் உறங்கியதால், அதே திசையில் சென்று கொண்டிருந்த ஒரு லொரியின் பின்பகுதியில் மோதியதில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 93.6 கிலோமீட்டர் மைல்கல் அருகே நேற்று (21) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த வேன் ஓட்டுநரும், இடதுபுறம் முன் இருக்கையில் பயணித்த அவரது தாயாரும் கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கதிர்காமத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர்.

இச்சம்பவம் குறித்து பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *