மேஷம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தையும் இனிமையையும் கடைப்பிடிப்பதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழிலில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
ரிஷபம்: மனக்கவலைகள் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால் முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுனம்: உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்க உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகாமல் கவனமாகச் செயல்படுவது நல்லது.
சிம்மம்: மாணவர்களுக்கு கல்வியில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். பணவரவு மற்றும் மனமகிழ்ச்சிக்கு வாய்ப்புகள் காணப்படும்.
கன்னி: செலவுகளில் கவனம் தேவை. மனக்கவலை மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் பலனளிக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கலாம். பணிகளை மேற்கொள்ளும்போது கவனம் அவசியம்.
விருச்சிகம்: குடும்பத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பது முக்கியம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
தனுசு: பழைய நினைவுகள் மனதைப் பாதிக்கலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்ட பணிகளில் தடைகள் ஏற்படலாம்.
மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளதால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
கும்பம்: மனக்கவலைகள் குறையும். எடுத்த காரியங்களைத் திருப்திகரமாக முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களின் உதவியும் கிடைக்கலாம்.
மீனம்: தொழில், வியாபாரத்தில் தடைகள் குறையும். புதிய ஆர்டர்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.

