ஒருகொடவத்தையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கிராண்ட்பாஸ், ஒருகொடவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிருலப்பனையைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *