ஹற்றன் பேருந்து நிலையத்தில் பஸ்கள் மீது மண்மேடு சரிவு!

ஹற்றன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், கன மழையால் ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்துள்ளன.

 

இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இரண்டு பேருந்துகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மேலதிக சேதங்களைத் தவிர்க்கும் வகையில், பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏனைய பேருந்துகளை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *