சர்வதேச காவல் துறையின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘கஜ்ஜா’ என்றழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அனுஷா லக்மாலி பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையிலேயே ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

