இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை – நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

