அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தம்!

நாட்டின் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று வெள்ளிக்கிழமை (30) ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

குறிப்பாக பல்கலைக்கழக கட்டமைப்பினுள் காணப்படும் சிக்கல்கள் மற்றும் ஆளனிப் பற்றாக்குறையை முன்வைத்தே மேற்படி வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதனால் நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழங்களில் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாகத் தடைப்பட்டன.

இதேவேளை பல்கலைக்கழக கட்டமைப்பினுள் காணப்படும் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் 2025 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை உள்ளீர்த்தல் தொடர்பான தாமதம் போன்றவற்றுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியிலின் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக் கொண்ட கல்விசார் ஊழியர்கள் ‘கல்வியையும் தேசத்தையும் காப்பாற்ற வேண்டும்’, ‘சமமான உயர்கல்விக்காக அனைவரும் ஒன்றிணைவோம்’, ‘விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்கு’, ‘அரச பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம்’ முதலான பதாதைகளை கையில் ஏந்தியும் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அரச பல்கலைக்கழகத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கல்விசார் ஊழியர்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கொன்றும்  இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *