கட்டுகஸ்தோட்டையில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் தீ!

கண்டி, கட்டுகஸ்தோட்டை, குடுகல பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று புதன்கிழமை (04) அதிகாலை 5.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்து காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் A9 பிரதான வீதியின் கட்டுகஸ்தோட்டை, குடுகல பகுதியூடான வாகனப் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முற்றாக தடைப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கண்டி மற்றும் மாத்தளை மாநகரசபை தீயணைப்புப் பிரிவுகளின் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், தற்போது தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *