சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 0.59% வீழ்ச்சியாகும்.

அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 97.31 அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் சரிவு 1.06% ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதுடன், அது 99.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஈரானுடனான போர் மோதல்கள் தணியும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் கச்சா எண்ணெய் விலை சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமிருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்புடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் மேலும் தீவிரமடைவதற்கான ஆபத்து குறையும் என்ற எதிர்பார்ப்புகளும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *