ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி மனு!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியரான பி. ஏ. ரத்னபாலவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை சாதாரண அல்லது சிறைச்சாலை ஆடையில் அலங்கரித்து, கைவிலங்கு மாட்டி ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலை விதிகளின் 156(2) ஆம் பிரிவின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறி அவர்களின் உருவத்தைப் புகைப்படம் எடுப்பது, காணொளி பதிவு செய்வது, விநியோகிப்பது அல்லது அதற்கான அனுமதியை வழங்குவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *