சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு இன்று (10) பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 13 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். மேலும், 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதனையடுத்து, 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, பெண்கள், விசேட தேவையுடையோர், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 2.3 மில்லியன் ரூபாவும், அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்துவதற்காக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சேவைகள், தாய்சேய் பராமரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் போசாக்குணவு வழங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

