ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உனவட்டுன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.

குறித்த பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உனவட்டுனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 134 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் 125 கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *