சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் விடுதலை!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டமைக்காக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜன் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 9ஆம் திகதி அவருக்கு எதிரான முழு வழக்கு நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கு அந்நாட்டு சட்டமா அதிபர் தரப்பு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர் இலங்கைக்குத் திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *