ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கையின் இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மாவட்டங்களை எலிக்காய்ச்சல் பரவக்கூடிய ஆபத்துப் பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக விவசாயிகள், வயல் மற்றும் சேற்று நிலங்களில் பணியாற்றுவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

எலிக்காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர் அல்லது மண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய தொற்றுநோயாகும்.

பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *