உலகச் சந்தையில் WTI, பிரண்ட் எண்ணெய் விலைகள் 3.5% வீழ்ச்சி!

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது.

இன்று காலை 6 .30 மணியளவில் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.45 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 3.5% வீழ்ச்சியாகும்.

அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 89.63 அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் சரிவு 3.5% ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதுடன், அது 89.29 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ஈரானுடனான மோதல்களை தொடர்ந்து கடந்த காலங்களில் பாரியளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்ட நிலையில் அதன் விலைகள் சடுதியாக உயர்ந்தன.

எனினும் மத்திய கிழக்கில் மோதல்கள் அவ்வப்போது தொடர்ந்தாலும், எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட வாய்ப்பில்லை என எதிர்வுகூறப்படுவதால் அதனை விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *