ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியன்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஏற்பாடு செய்திருந்த வளர்ந்துவரும் நாடுகளின் மகளிர் இருபதுக்கு-20 (வு20) கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி இன்று (25) தோல்வியுறாத அணியாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை அணி இந்த வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கைப் பந்துவீச்சாளர்களின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக அலானா டால்செல் (Alana Dalzell) 25 பந்துகளில் ஒரு பவுண்டரி அடங்கலாக 24 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகளுக்குச் சோபிக்க இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இடமளிக்கவில்லை.

97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை வீராங்கனைகள்இ 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இமேஷா துலானி, 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை சஞ்சனா காவிந்தி 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, சிம்பாப்வே, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் இந்தத் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *