ஹம்பாந்தோட்டை அருகே பழுதடைந்த கப்பல் பாதுகாப்பாக மீட்பு!

ஹம்பாந்தோட்டைக்கு அப்பால் சுமார் 12 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறுக்குள்ளான சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல், பாதுகாப்பாக இழுத்துவரப்பட்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

159.99 மீற்றர் நீளமான MV AAL Gibraltar என்ற குறித்த கப்பலில் சுமார் 23,000 மெற்றிக் தொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

நான்கு மீட்புப் படகுகளின் உதவியுடன் கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம், கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் துறைமுகத் தலைவர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கப்பலின் இயந்திரக் கோளாறுகளைச் சீரமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பச் சேவைகள் உள்ளிட்ட வசதிகளை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வழங்கியுள்ளது.

தற்போது குறித்த கப்பலின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *