மட்டக்களப்பில் நடுவீதியில் கைவிடப்பட்ட பெண் மீட்பு!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிசார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவர் ஆள்நடமாட்டமற்ற வீதியில் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

119 அவசர இலக்கத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன் போது கடும் நோயால் அவதிப்பட்டு அநாதரவாக பரிதவித்துக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் மீட்டு 1990 அம்புலன்ஸ் வரவழைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *