மட்டக்களப்பில் கடல் மீன் விலை உயர்வு!

கிழக்கு கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

இதன்படி, முன்னர் ஒரு கிலோ 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கடல் மீன்கள் தற்போது 3,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நன்னீர் மீன்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

முன்னர் ஒரு கிலோ 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நன்னீர் மீன்கள் தற்போது 2,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன், நன்னீர் மீன்பிடியாளர்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு வாவியில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *