நாட்டின் வறுமையின் சதவிகிதம் அதிகரித்துள்ளது!

நாட்டில் வாழும் 20 சதவீத பணக்கார மக்களின் வருமானம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில்இ அதேபோல் 20 சதவீதமான ஏழை மக்களின் வருமானம் 19.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்விடயம் தொடர்பில் சபையில் அவர் மேலும் கூறியதாவது ஒவ்வொரு அரசாங்கமும் முக்கியமாக அவதாகம் செலுத்த வேண்டிய மக்கள் பிரிவினருக்காகப் பணம் செலவிடப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி அநுர திசாநாயக்க முன்வைத்துள்ளது முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்படுகிறது.

அதாவது பணக்காரர்களிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதை விட்டு விட்டு இந்த நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து மேலும் மேலும் எடுத்து, தனக்கு நெருங்கிய நண்பர்களான வியாபார வர்க்கத்தை மேலும் பணக்காரர்களாக்குவதாகவே உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்களும் இதே அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ஏழைகளைத் மேலும் ஏழைகளாக மாற்றி, நெருங்கிய நண்பர்களான வியாபாரக் கும்பலைக் மேலும் பணக்காரர்களாக மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டின் வறுமை விகிதம் 14.3% இலிருந்து 16% ஆகக் படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *