சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல்!

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகிலிருந்த 3.6 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏழு வெளிநாட்டுப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் படகு மடக்கிப் பிடிக்கப்பட்டது. எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமான கொடியின்றிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த படகு, நேற்று (27) திக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, “‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். அத்துடன், இந்த நடவடிக்கையின் ஊடாக இதுவரை 379 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *