மெட்ரோ பஸ் சேவை இடைநிறுத்தம்!

கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பாதை பஸ் சேவையை CM06 2026 டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக லங்கா மெட்ரோ டிரான்சிட் (Lanka Metro Transit – LMT) நிறுவனம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான லங்கா மெட்ரோ டிரான்சிட் விசேட பயணிகள் சேவை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு கவலை தெரிவிப்பதாகவும், இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *