சிக்கல்களை தீர்க்கவில்லையென்றால் அரசாங்கம் தோல்வியுறும்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எழுந்துள்ள தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் அரசியல் மோதல்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யத் தவறினால், தற்போதைய அரசாங்கம் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் எனக் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், வரவு-செலவுத் திட்டத்துடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் பாரிய பலவீனத்தை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் தேவையற்ற விதத்தில் முரண்பட்டு, முன்னைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் மிக மோசமான காலப்பகுதியில் எஸ்.பி. திசாநாயக்க போன்ற அமைச்சர்கள் பின்பற்றிய ஆணவமான மற்றும் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், மஹிந்த ஜயசிங்க போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் அது புலப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு அணுகுமுறையினால் எந்தவொரு அரசாங்கத்தாலும் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

தற்போதைய பிரதமர் உட்படப் பல அமைச்சர்கள் தொழிற்சங்க இயக்கங்களில் முன்னணியில் இருந்தவர்கள் என்பதால், அவர்கள் இந்த நிலைமையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பயணிக்கும் ‘தொங்கு பாலம்’ மிகவும் நீளமானது என்றும், நாட்டிற்குள் நிலவுவது ஒரு கட்டமைப்பு ரீதியான பொருளாதார நெருக்கடியாகும்.

கடன் பெறுவது பிரச்சினையல்ல என மத்திய வங்கி ஆளுநரின் வெளியிட்ட கருத்துத் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்-

டொலர்களை ஈட்டும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகக் கடன்களைப் பயன்படுத்துவது பொருளாதாரத்திற்குப் பயனுள்ளதாக அமைந்தாலும் இலங்கையில் நிலவும் நுகர்வுக்கான கடன் கலாசாரத்தின் ஊடாகப் பொருளாதாரத்திற்கு நீண்டகால நேர்மறையான தாக்கம் ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

மேலும்இ வரிகளைக் குறைத்தல் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல் போன்ற கோரிக்கைகளின் ஊடாக வெளிநாட்டுக் கையிருப்பு மீது அழுத்தம் அதிகரித்து நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *