திருக்கோவிலில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உயர்மட்ட விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்றிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்போது, டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான களப்பணிகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிக ஆளணியினர் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் சுகாதாரத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் கல்வித்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *