கண்ணிவெடி அகற்ற டொலர்உதவி!

லங்கையில் மனிதாபிமான நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், கடந்த 24 ஆண்டுகளில் இதற்காக 130 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது.

அந்த உதவியின் மூலம் நாட்டில் கண்ணிவெடி அபாயத்தை 90% குறைக்க முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இன்று(29) நடைபெற்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நன்கொடையாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி மயர்ஸ் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நிலப்பரப்புகள் பாதுகாப்பானவையாக மாற்றப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கும், விவசாயிகள் மீண்டும் தமது விளைநிலங்களில் பணியாற்றுவதற்கும், சிறுவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக விளையாடுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

பயனுள்ள அமெரிக்க வெளிநாட்டு உதவிகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோவின் (Secretary Marco Rubio) தொலைநோக்குப் பார்வை இந்த முன்னேற்றத்தின் மூலம் நன்கு பிரதிபலிப்பதாகவும் பிரதித் தூதுவர் வலியுறுத்தினார்.

தெளிவான நோக்கங்கள், அளவிடக்கூடிய பெறுபேறுகள் மற்றும் குறிப்பிட்ட இறுதி இலக்கை நோக்கிய வேலைத்திட்டம் ஆகியவை அந்தத் தொலைநோக்குப் பார்வையில் உள்ளடங்கியுள்ளன என்றும், எஞ்சியுள்ள கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை முன்னின்று செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் இலக்கை அடையும்போது, அது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி, அமெரிக்க உதவிகள் மற்றும் வலுவான உள்ளூர் பங்குடைமைகள் மூலம் அடையக்கூடிய வெற்றிகளுக்கும் ஒரு முக்கிய சான்றாக அமையும் என மயர்ஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த முக்கியமான பணியின் இறுதிக்கட்டத்திற்கு இலங்கை தலைமை தாங்குவதைக் காண்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *