மனித குலத்தை போஷித்து உயிர்ப்பூட்டும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம், வீ எபெக்ற் நிறுவனங்களும் அனுசரணை வழங்கியிருந்தன.பிரதேச மகளிர் அபிவிருத்தி அலுவலர் நவநிதனி ரமேஷ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அமலினி,
மகளீர் தினங்கள் கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டும். அதன் மூலம் ஆக்கபூர்வமான செய்திகள் சமூகத்தின் அடிமட்டத்திற்குச் சென்றடைந்தால்தான் அங்கு சமத்துவ அபிவிருத்தி மூலம் பெண்கள் சவால்களை முறியடித்து முன்னேற முடியும். எனவே “மனப்பாங்கில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ” என்றார்.
பல பாத்திரப் பதவிகளை வகிக்கும் பெண்கள் அவர்களது அர்ப்பணிப்பின் உச்சபட்சப் பொறுப்பாக நாட்டிற்று நல்ல பிரஜையை உருவாக்கிக் கொடுக்கன்றாள். மனித குலத்திற்காக இத்தனை பாரிய கடமைகளையும் அவள் பொறுப்புணர்ச்சியோடு அவள் ஆற்றுகின்றபோது அவளுக்குக் சமூகத்திலே ஒத்துழைப்பு, ஊக்குவிப்பு, பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் அது விடையில்லாத வினாவாகவே இருக்கும். எனவே மனித குலத்தை உயிர்ப்பிக்கும் மாதரின் மாண்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழினுட்பப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிறியசல்யா சிறிவத்ஸன், வாகரைப் பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ். பிரதீபா உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், கிராம அலுவலர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான ஏ. சஞ்ஜித், லதா ரவீந்திரராஜா உட்பட பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் மாணவிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

