கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வாய்க்காலில் காணப்படுகிறது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி எனும் 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


