புகைப்படம் எடுத்து முகநூலில் தரவேற்றம் செய்தமை தொடர்பில் ஒருவர் கைது

பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படங்களை முகநூலில் தரவேற்றிய மட்டகளப்பில் கடமையாற்றிவரும் பொலிஸ் கைது

இதனையடுத்து குறித்த பொலிஸாரை பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு சம்பவதினமான இன்று வரவழைத்ததையடுத்து அவர் அங்கு சென்ற நிலையில் அவரை கைது செய்துள்ளனர்

பொத்துவில் பிரதேசத்துக்கு சென்று அங்கு குறித்த பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்துள்ளபோது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் தரவேற்றம் செய்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ்வாறு கைது செய்தவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதயடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *