மட்டக்களப்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து இராஜினாமா

இடம்பெற்று முடிந்த தேர்தல்களின் பின்பு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அக்கட்சியின் செயற்பாடுகளில் விரக்தி அடைந்து தொடர்ச்சியாக பிரதேச அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகுகின்ற செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இதே வேளை அக்கட்சியின் மண்முனை வடக்கு உப பிரதேச அமைப்பாளரான ஏ. ஜெயக்காந்தன் மட்டும் கட்சியின் மகளீரணி தலைவி திருமதி கண்ணகி ரவீந்திரநாதன் ஆகிய இருவரும் இன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில்இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இன்று(27) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது இக்கட்சியின் அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக விலகுவதற்கான காரணம் கட்சியின் தலைமை தன்னிச்சையான முடிவுகள் தான் காரணம் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு நிலையில் அவர்களுடன் தேசிய மக்கள் சக்தி இணைவது இன்னும் பின்னோக்கியே பயணிக்க உள்ளது மக்கள் இன்னும் இதனை வெறுக்கவே செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *