வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மோட்டார் சைக்கிள் உடன் பட்டாரக வாகனம் மோதியே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்
விபத்தில் காயமடைந்த நபர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்து சம்பவம் தொடர்பாக மருதங்கணி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

