மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் தொழிற்சங்க நடவடிக்கை; அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்திலும் தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் இரண்டாவது நாளாகவும் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(30) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலகம் தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்தது.

இதனால் அஞ்சல் அலுவலக வேலைகள் தடைப்பட்டிருந்ததுடன் முக்கிய தேவைகளுக்காக வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்கள் போக்குவரத்து பொலிஸாரின் தண்டப்பணம் செலுத்த முடியாமல் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர் இதனால் தூர இட தபால் சேவைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *