10,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலையின் கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 17 வயது சிறுவன் மீது வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்க்க ரூ. 10,000 இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயம் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *