மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் சுற்றிவளைப்பு; 7 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று(31) சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பின் போது 9 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன்  7 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் 6 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 5 மணித்தியாலங்கள் வரை சோதனையின் போது பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *