மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

உலக சுற்றாடல் தினமான ஜூன் மாதம் 5ஆம் திகதியை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்று(02) மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனியானது இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியுடன் மாநகர சபை முன்றலில் இருந்து மாநகர சபை ஆணையாளர் தலைமையிலான உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு அரசடி சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து காந்தி பூங்காவை வந்தடைந்தது.

அத்துடன் உலக சுற்றாடல் தினம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் விழிப்புணர்வு வீதி நாடகமும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கழிவுகளை சீரமைப்போம்; சூழலைப்பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந் நடைபவனியில் பிரதேச செயலகத்தினுடைய உதவிப்பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகர  சபையினுடைய உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு விழிப்புணர்வு நடை பவனியில் ஈடுபட்டோர் பல்வேறுபட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு நடை பவனியினை மேற்கொண்டதுடன், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் இதன்போது சேகரிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *