பிளாஸ்டிக் பொலித்தின் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் விசேட பரிசோதனை

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இன்று(02) தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸார் மற்றும் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் நகரின் பிரதான சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொலித்தின் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் விசேட பரிசோதனை செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இதன் போது வியாபார அனுமதிப்பத்திரம் பொலித்தீனால் பொதி செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உபகரணங்களை விற்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு விசேட விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நா. சுந்தரேசன் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *