கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று(02) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போட்டிப் பரீட்சை நியமனம் வழங்கக் கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன் போது, பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா?, அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை புறக்கணிப்பது ஏன், பரீட்சை வேண்டாம் தகுதிகான் அடிப்படையில் வேலை போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *