நகர வாகனத் தரிப்பிடங்களின் திறப்பு விழா

நகர வாகனத் தரிப்பிடங்களின் திறப்பு விழா இன்று(02) மாலை இடம்பெற்றது.

 

இதன் போது மாநகர ஆணையாளர் நா. தனஞ்ஜெயன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

இந் நிகழ்வானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தகசங்கத் தலைவர் தேசபந்து செல்வராசா, இஸ்லாமிய நலன்புரி வர்த்தக சங்கத் தலைவர் ஜானப்.கலீல் ஹாஜியார், குரு தலைவர் மட்டக்களப்பு மறை மாவட்டம் அருட் தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ், வர்த்தகர்கள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *