வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு நீதி வேண்டி பிரதேச மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம்

கடந்த 31ம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தம்பிராய் குளத்திற்கு அண்மையில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பூநகரி செம்மன் குன்று பகுதியைச்சேர்ந்த கந்தசாமி பிரணவனின் இறுதிக்கிரியை இன்று(03) நடைபெற்றது.

இந் நிலையில் அவரின் கொலைக்கு நீதி வேண்டி இறுதி ஊர்வலத்தின் போது பிரதேச மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

வாள் வெட்டுக்குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள், உயிரைப் பறித்தவரை ஒரு போதும் மன்னிக்காதே, போதையை கூண்டோடு ஒழிப்போம் போன்ற பதாகைகளையும் இதன்போது ஏந்தியிருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *