யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 3 ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
நேற்று(02) நடைபெற்ற அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் 1 ஆம் 2 ஆம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறித்த துறைமுக அபிவிருத்திப் பணிகள் 3 ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

