மட்டு நகர 2 பாடசாலைகளில் கல்லடி விநாயகர் வித்தியாலயம் மற்றும் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று(04) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் வாந்தி, தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் துரிதமான நடவடிக்கை காரணமாக ஆம்புலன்ஸ் வண்டிகளில் துரிதமாக வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ். உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டார்.
இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலை சிற்றுண்டிச்சாலைக்கு ஒரு நபர் உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் குறித்த பாடசாலையில் புட்டு வாங்கி உண்டமையினால் இந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த பாடசாலைகளில் உணவு சுகாதாரத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக இரசாயன பகுப்பாய்வுகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

