மது போதையில் லொறியை செலுத்தி விபத்து ஏற்படுத்திய சாரதி கைது

மது போதையில் லொறியை செலுத்திய சாரதி ஒருவரை இன்று(04) இரவு மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறி கல்லடி பகுதியில் ஓரமாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டதில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

லொறியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் முன்பாக பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதன் போது லொறியின் சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.

 

இவ்விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *