மட்டு மாமாங்கத்தில் உயிரிழந்த நிலையில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை (26) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த (71) வயதுடைய செல்லத்துரை கங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ள நிலையில் நேற்று படுக்கையறையில் இரவு நித்திரைக்கு சென்றவர் எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *