காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தினால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மல்லிகையாறு விழுநீர்தொடர் தொகுதியின் கீழ் மருதமரம் மற்றும் புங்கமரம் உள்ளடங்களாக 300 மரங்கள் அக்கராயன் பிரதேசத்தில் பிடாரிப்பள்ளக்குளம், பறயன்குளம் மற்றும் உப்புவில்குளத்தின் கீழ் தெரிவுச் செய்யப்பட்ட பகுதியில் சியாப்பின் பிரதிதிட்டப் பணிப்பாளர் ஏ. ஜி. சி பாபு, திட்ட உத்தியோகத்தர்கள், இதனுடன் தொடர்புடைய திணைக்கள உத்தியோகத்தர்கள், அப்பகுதியைச் சார்ந்த கமக்கார அமைப்புக்கள் மற்றும் மக்கள் பங்கேற்பில் நடப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் இந்த 300 மரங்களுக்குரிய பராமரிப்பை குஞ்சுக்குள கமக்கார அமைப்பு மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


