கிளிநொச்சியில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை 175 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது.

 

 

இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலைப் பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் பல தடவைகள் கிருமி நாசினி விசிறப்பட்டிருந்த போதிலும் உரிய விளைச்சலை பெற முடியாத நிலைதோன்றியுள்ளதாகவும் நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்தினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் உரிய காலத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

 

 

இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலையில் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கமாவது விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு உரிய நேரத்தில் நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ச்சியாக விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *