கிளிநொச்சி நகர் ஜீம்ஆ பள்ளிவாசலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று(07) சிறப்பாக நடைபெற்றன.

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து வருவதோடு, உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் கிளிநொச்சி நகர் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் பெருநாள் தொழுகை இன்று இடம்பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *