ஆரம்பமானது வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக்குழு கூட்டம்

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (27) காலை 10 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இக்கூட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி பிரதேச அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு தற்போது கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *