ஏறாவூரில் பழைய இரும்பு கடையில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று(08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்புப் பிரிவு  மற்றும் ஏறாவூர் நகரசபை, பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.

தீ பரவல் குறித்து ஏறாவூர் பொலிஸார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *