கால் நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; அரச கால்நடைகள் சேவைகள் பாதிப்பு 

கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதனைத் தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாகத் தெரிவித்து கிளிநொச்சியில் அரச கால்நடை வைத்தியர்கள் இன்று(09) காலை 6.00மணி முதல் 24மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி மற்றும் கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகமளிக்காமையால் கால் நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *